Breaking News

யுவராஜ் சிங்ன் மனோதிடம் | Yuvraj Singh's psychotherapy

யுவராஜ் சிங்ன் மனோதிடம் | Yuvraj Singh's psychotherapy

யுவராஜ் சிங்ன் மனோதிடம்

நீங்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டங்களை கவனித்து வந்திருந்தால் யுவராஜ் சிங் என்றைக்குமே மனோதிடத்தில் முதலாவதாகத்தான் இருந்து வந்திருக்கிறார் என்பதை கவனித்திருப்பீர்கள் அவர் மிகச் சிறந்த ஆட்டத்திறம் கொண்டவராக வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம்.
ஆனால் சமீப காலத்தில் நாம் பார்த்தவரை, இவரைப் போல் ஒரு அதிரடி ஆட்டக்காரர் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவர் வாழ்க்கையையும் அதே போல்தான் கையாளுகிறார் என்பது அவரைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிகிறது.
மருத்துவ தொழில்நுட்பம் நிச்சயமாக தேவை, மருத்துவத்தின் உதவியில்லாமல் இவர் நிலையைப் பொறுத்த வரை எதுவுமே செய்திருக்க முடியாது.
ஆனால் மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் எல்லாரும் இவரைப் போல் நோயிலிருந்து மீண்டு வருவதில்லை.
நோயிலிருந்து நீங்கள் எவ்வாறு மீண்டு வருகிறீர்கள் என்பது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைப் பொறுத்தது, உங்கள் மனோதிடத்தைப் பொறுத்தது.
எந்த நிலைமையிலும் தளாராத மன உறுதி, இது போன்ற சூழ்நிலைகளில் உறுதுணையாய் இருக்கும்.
ஒரு தீர்மானத்தோடும், விடா முயற்சியோடும் இதை ஒருவரால் செய்ய முடியும் என்றால், அவர் எதிலிருந்தும் சுலபாக மீண்டு வர முடியும்.
உங்களுக்கு நல்லது நேர்ந்தாலும் சரி, கெட்டது நேர்ந்தாலும் சரி, உலகத்தார் அதை எப்படி பார்த்தாலும் சரி, அந்த சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக உங்களால் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
யுவராஜ் சிங்கிற்கு கேன்சர் மட்டும் வந்திருக்காவிட்டால் இன்று நாம் போற்றும் கதாநாயகனாக அவர் உருவாகியிருக்க முடியுமா என்ன?
அவர் மீண்டும் உயிர் பெற்று வந்திருக்கும் விதத்தால் மக்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இது நடந்திராவிட்டால் அவர் மற்றுமொரு கிரிகெட் வீரராய், பத்தோடு பதினொன்றாய் போயிருப்பார்.
தற்சமயம் அவர் களத்திற்கு திரும்பி வந்திருக்கும் அழகு நம் தேசத்தில் பெருத்த மதிப்பைப் பெறப் போகிறது.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..