Breaking News

கர்ப்பகாலத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது? | What Not to Do During Pregnancy

கர்ப்பகாலத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது? | What Not to Do During Pregnancy

கர்ப்பகாலத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது?

கர்ப்பகாலத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது, என்ன சாப்பிடவேண்டும் என்ன சாப்பிடக்கூடாது, எப்படிப்பட்ட உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதையெல்லாம் எல்லா மருத்துவர்களும் சொல்வார்கள்.
கூகிளில் ‘கர்ப்பகாலம்’ என்று டைப் செய்து ஒரு கிளிக் செய்தாலேபோதும், எல்லா குறிப்புகளும் புள்ளி விவரங்களொடு உங்கள் கண்முன் வந்துவிடும்.
” அறிவியலும் விஞ்ஞானமும் எவ்வளவோ வளர்ந்து கர்ப்பகாலத்தில் பலவிதங்களில் ஒரு பெண்ணிற்குத் துணை நின்றாலும், நவீன விஞ்ஞானம் கோட்டை விட்டிருக்கும் ஒரு பெரிய ஓட்டை இருக்கிறது, அதுதான் மெய்ஞானம்.
வெளிநிலையில் எவ்வளவுதான் செய்தாலும், உள்நிலையில் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் வரப்போகும் உயிரின் தன்மையையும், அந்த உயிரைக் கொண்டுவருவதில் தாயின் பெருமையையும் தீர்மானிக்கிறது.
ஒரு தாயாக இருந்தால், அடுத்த தலைமுறையை எப்படி உருவாக்கப்போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.
இந்தியாவில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை எப்படி இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.
எப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கவேண்டும் எப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கக்கூடாது, எதைப் படிக்கவேண்டும் எதைப் படிக்கக்கூடாது, எப்படிப்பட்ட வாசனைகளை நுகரவேண்டும் என்பது முதற்கொண்டு முழுவதும் கண்காணிக்கப்பட்டது.
இது முற்றிலும் மறைந்து, கர்ப்பிணிப் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், சினிமா பார்க்கிறார்கள், மது அருந்தகத்திற்குப் போகிறார்கள், இப்படி இன்றையநிலை வேறுவிதமாக மாறிப் போயுள்ளது.
ஒரு பெண் கருத்தரித்தவுடன், அவளை மிகவும் இனிமையான உணர்வுகளுடன் வைத்துக்கொள்வதுதான் நோக்கம்.
ஒருக்கணம் கூட அவளுக்குள் கோபமோ, எரிச்சலோ, வருத்தமோ ஏற்பட்டுவிடாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.
அவள் கருவிற்குள் என்னென்ன பதிவாகின்றன என்பதில் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
அவள் தனக்குள் எப்படிப்பட்ட பதிவுகளை எடுத்துக்கொள்கிறாளோ, அதேதான் பிறக்கப்போகும் கருவிற்குள்ளும் செல்கிறது.
அதுமட்டுமல்ல, கணவன் மனைவி இருவருக்கும் அவர்களைப் போலவே ஒரு உயிரை உருவாக்குவதில் விருப்பமில்லை.
அவர்களை விடவும் பரிணாமவளர்ச்சியில் கொஞ்சம் மேலான உயிரை ஈர்க்க விரும்பினார்கள்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..