Breaking News

புகை பிடித்தலை நிறுத்துவது எப்படி? | How to Stop Smoking

புகை பிடித்தலை நிறுத்துவது எப்படி?

புகை பிடித்தலை நிறுத்துவது எப்படி?

புகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன.
இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன.
புகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன.
இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் நுரையீரல் கஷ்டப்படுகிறது.
இதற்குத் துணை கொடுக்க இதயம் அதிகமாக இயங்கும்பொழுது, அதுவும் பாதிக்கப்படுகிறது.
மனதளவில், நாளடைவில் பயம், பதற்றம், கோபம், சமநிலையற்றதன்மை, ஈடுபாடற்றதன்மை போன்றவை புகைபிடிப்போரின் இயல்பாகிறது.
உடல் முழுவதுமுள்ள நரம்பு மண்டலத்தைத் தூண்டுவது புகை செய்யும் வேலை.
ஆனால், ஒருவரின் நரம்பு மண்டலம் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளதோ அவ்வளவு பிரச்சனையின்றி அவரது முதுமை கழியும்.
ஓர் ஆய்வின்படி 70% மேற்பட்டோர் நண்பர்களின் உந்துதலினாலும், அவர்களின் வற்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவிக்கச் சிரமப்படுவதாலும் புகைபிடிக்க ஆரம்பிப்பதாகக் கூறப்படுகிறது.
பலர் லைட் சிகரெட், தாங்களே தயார் செய்தது அல்லது ஃபில்டர் சிகரெட் பிடிப்பதால் நச்சுப் பொருட்களைச் சுவாசிப்பதில்லை என்று நினைக்கிறார்கள்.
புகை பிடிப்பவரின் நுரையீரல்கள் பாதிப்படைந்ததற்கான சில அறிகுறிகள்: அடிக்கடி சளி பிடித்தல் தொடர் இருமல் இருமும் போது சளி வருதல் சிறிது தூரம் நடந்தாலே மூச்சு இரைப்பு ஏற்படுதல்.
புகைபொருள் இன்றி புகைத்தல் செகன்ட் ஹான்ட் ஸ்மோகிங் (Second hand smoking) ஒருவர் புகை பிடிக்கும்போது மூன்றில் இரண்டு பங்கு புகை காற்றில் கலந்து, அருகில் இருந்து அப்புகையைச் சுவாசிப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தர்ட் ஹான்ட் ஸ்மோகிங் (third hand smoking) புகைபிடிக்கும்போது, அப்புகை மற்றும் அதிலுள்ள ரசாயனங்கள் அந்த நபரின் கேசம், சருமம், மற்றும் அவரைச் சுற்றி உள்ள திரைச்சீலை, சோபா, குஷன், படுக்கை, தலையணை போன்றவற்றில் தங்கிவிடுகின்றன.
அந்த சூழ்நிலையில் ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போதும் அப்பொருட்கள் உடலுக்குள் சென்று உடல் நலக்கேட்டை அளிக்கின்றன.
புகையினால் குழந்தைகளுக்கு வரும் கேடுகள்: காதில் சீழ் வருதல் மற்றும் காது கேளாமை.
இந்தியாவில் ஆண்டு தோறும் 90 லட்சம் மக்கள் புகைப் பழக்கத்தினால் ஏற்படும் நோய்களினால் இறக்கிறார்கள்!

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..