Breaking News

சைனஸ் | Sinus

சைனஸ் | Sinus

சைனஸ்

‘சைனஸ்’ யை குணப்படுத்திக் கொள்கிறேன் என்று பலவிதமான சிகிச்சைகளை மேற்கொண்டு, தங்கள் உடலுக்கு இன்னும் அதிகமாக உபத்திரவங்களை வரவழைத்துக் கொண்டவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.. தினம் காலை எழுந்திருக்கும் போதே சளியினால் மூக்கடைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வேம்பு, மிளகு, தேன் மற்றும் மஞ்சள்
உங்களுக்குள்ளேயே வெப்பம் சீர் செய்யும் கருவி பொறுத்தப்பட்டது போல், அதிக சூடோ, குளிரோ உங்களை அவ்வளவாக பாதிக்காது.
மூச்சுக்குழாய்களை சுத்தமாக வைத்து, சீராக நாம் மூச்சுவிடுவது ரொம்பவும் முக்கியம்.
ஏதோ, காற்று உள்ளே போய் வெளி வந்தால் போதும் என்ற மனநிலைதான் நிலவுகிறது.
நாசித்துவாரத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதும், சீராக மூச்சு விடுவதும் ரொம்பவும் முக்கியம்.தினம் காலை எழுந்திருக்கும் போதே சளியினால் மூக்கடைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வேம்பு, மிளகு, தேன் மற்றும் மஞ்சள் உட்கொள்வது மிக நல்லது.
வேப்ப இலைகளை நன்றாக பசை போல அரைத்து, சின்ன உருண்டையாக உருட்டி, அதை சிறிது தேனில் நனைத்து, தினம் காலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
இதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் உண்ணக்கூடாது.
இது சருமம், உணவு என்று மட்டுமில்லாமல் எல்லா வகையான அலர்ஜிக்கும் வேலை செய்யும்.
அதன் கசப்பை நீங்கள் கொஞ்சம் தவிர்க்க விரும்பினால், இளந்தளைகளை பயன்படுத்தலாம்.
10 அல்லது 12 மிளகுகளை 2 ஸ்பூன் தேனில் இரவு முழுவதும் ஊரவைத்து (8ல் இருந்து 12 மணி நேரம்), அதை காலையில் நீங்கள் உட்கொள்ள வேண்டும்.
சிறிது மஞ்சளை தேனுடன் கலந்து உண்பதும் கூட வேலை செய்யும்.
குறிப்பாக பால் சம்பந்தப்பட்ட எல்லா உணவு வகைகளையும் நீங்கள் தவிர்ப்பது, சளி/கோழை உருவாவதை குறைத்துவிடும்.. ஒவ்வொருவரின் உடல் தன்மை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அலர்ஜி இருப்பின், தீவிரம் வேறுபடும்.
மருத்துவம் துளசி, ஆடாதொடை, தூதுவளை, விஷ்ணுகரந்தை போன்ற அற்புத மூலிகைகளின் குணநலன்களை உணர்ந்த நம் சித்தர்கள் மூலம் அலர்ஜி போன்ற சுவாசப்பாதை பிரச்சனைகளுக்கு, இவை அருமருந்தாய் பயன்படுவதை அறிகிறோம்.
தற்போது, எளியமுறையில் உட்கொள்ள மாத்திரைகளாகவும், சிரப் வடிவிலும், ஒவ்வொருவரின் நோய் தன்மைக்கேற்ப தகுந்த கால அளவிற்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..