Breaking News

மலச்சிக்கல் என்றால் என்ன?

மலச்சிக்கல் என்றால் என்ன?

மலச்சிக்கல் என்றால் என்ன?

மலச்சிக்கல் ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடனுடம் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
இது எதனால் ஏற்படுகிறது என புரிந்து கொண்டால் இதைத் தடுக்க முடியும்.
நாம் உண்ணும் உணவு வயிற்றிலும், சிறுகுடலிலும் பயணிக்கும்போது பல்வேறு இரசாயனங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு, அதில் இருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் எடுக்கப்படுகின்றது.
தேவையான சத்துக்களைப் பிரித்தெடுத்த பின் மிஞ்சும் சக்கை, கழிவாக பெருங்குடலுக்கு வந்து சேர்கிறது.
பெருங்குடலில் தண்ணீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டவுடன், மீதி உள்ளவை மலமாக வெளியேற்றப்படுகிறது.
மலச்சிக்கல் ஏற்பட பொதுவான காரணங்கள்: உணவுமுறையில் மாற்றம் குறைந்த நார்ச் சத்துள்ள உணவு சாப்பிடுவது தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை இரும்பு, சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள் உடல் உழைப்பின்மை அதிக
மனஅழுத்தம் பிரயாணம் மலம் வரும் போது கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வது பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால், கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.
மருத்துவக் காரணங்கள்: பெருங்குடல், ஆசனவாய் இவற்றில் உள்ள தசைகளில் கோளாறு ஏற்படுவது தைராய்டு குறைவாகச் சுரப்பது சர்க்கரை நோய் பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்திலும், சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.
எவ்வாறு விடுபடுவது: வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரி செய்யலாம்.
நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவினால் மலச்சிக்கல் ஏற்படுகிறதா எனக் கவனிக்கவும்.
மருந்துகள்: இப்பிரச்சினை மிகவும் பாதிப்பாக இல்லையென்றால் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது.
மிகுந்த தொந்தரவாக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
ரத்தம் கலந்த அல்லது கறுப்பான மலம்: மலத்தில் இரத்தம் கலந்திருந்தால், ஜீரண மண்டலத்தில் ஏதோ காயம் ஏற்பட்டிருக்கிறது என அர்த்தம்.
வாயிலிருந்து ஆசனவாய் வரை ரத்தக் கசிவு எங்கிருந்து வேண்டுமானாலும் ஏற்படலாம்.
ரத்தம் கறுப்பு நிறத்திலிருந்தால் ஜீரண மண்டலத்தின் முதல் பாதியிலிருந்தும் – சிகப்பு நிறத்தில் இருந்தால், ஜீரண மண்டலத்தின் இரண்டாவது பகுதியிலிருந்தும் வருவதாகக் கொள்ளலாம்.
வயிற்றுப் புண், ரத்த நாளங்களின் கோளாறுகள் போன்றவை கறுப்பான மலத்தை ஏற்படுத்தும்.
ஆசன வாயில் வெடிப்பு, ஹெமராய்ட்ஸ், குடலில் ஏற்படும் தொற்று, புற்றுநோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை சிவப்பு நிற ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..