Breaking News

கல்விக்கடன் மறுக்கப்படுவதற்கான காரணங்கள்.

கல்விக்கடன் மறுக்கப்படுவதற்கான  காரணங்கள்.

கல்விக்கடன் மறுக்கப்படுவதற்கான  காரணங்கள்.

1.கல்விக்கடன் விண்ணப்பிக்கும் அனைவருக்குமே கல்விக்கடனானது வழங்ககப்படுவதில்லை. பல்வேறு காரணங்களால் அவை மறுக்கப்படுகின்றன.

2. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கல்விக்கடன் கொள்கைகளை பின்பற்றுகின்றன.நீங்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக அணைத்து வங்கியின் கல்விக்கடன் வட்டிவீதம் மற்றும் தவணை முறை போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்திருத்தல் மிகவும் அவசியம்,ஏனெனில் இது உங்களுக்கு பிற்காலத்தில் பணத்தை திருப்பி செலுத்தும் போது உங்களுக்கு மிகவும் பயனுள்ளது.

3. பொதுவாக வங்கிகளில் பொறியியல்,மற்றும் மருத்துவம் போன்ற அதிகமான பாடக்கட்டணம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ள துறைகளுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

4. ஜாமீன் கையெழுத்து போடுபவரின் வாங்கி கணக்கு சரியாக இல்லாமல் இருந்தாலோ அல்லது நீங்கள் சமர்ப்பித்த மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழில் ஏதாவது பிழை இருந்தாலோ உங்கள் விண்ணப்பமானது நிராகரிக்கப்படலாம்.

5. அங்கீகரிக்கப்படாத கல்விநிறுவனங்களில் படிப்பதற்கு நீங்கள் விண்ணப்பித்திருந்தால் உங்கள் விண்ணப்பமானது நிராகரிக்கப்படலாம்.

6. உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானமானது மிகவும் குறைவாக இருந்தாலும் நிராகரிக்கப்படலாம்,

7. ஒரு வங்கியில் நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பமானது நிராகரிக்கப்பட்ட்ட்டால் நீங்கள் துவண்டு விடாமல் முன்பு செய்த தவறை திருத்தி கொண்டு உடனடியாக வேறு வங்கிக்கு விண்ணப்பிப்பதே உங்களின் புத்திசாலித்தனம்.

8. கல்விக்கடன்  பெரும் மாணவர்களின் வயது வரம்பு 16 முதல் 26 வரை ஆகும்.

9. உங்கள் கல்விக்கடனாக உங்களின் சேர்க்கை,தேர்வுக்கட்டணம்,புத்தக செலவு,மற்றும் பயண செலவானது ஆகியவையும் வழங்கப்படும்.

10. இந்தியாவில் படிக்க கல்வி கடன் தொகை 10 லட்சம் வரை.

11. வெளிநாட்டில்  படிக்க கல்வி கடன் தொகை 20 லட்சம் வரை.

12 கல்வி கடன் தொகையை திருப்பிச்செலுத்த அவகாசம் நீங்கள்  படித்து முடித்ததில்  இருந்து 5 முதல் 7 ஆண்டுகள் வரை.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..