Breaking News

இருமலுக்கு சிறந்த மருந்து? | Best medicine for cough?

இருமலுக்கு சிறந்த மருந்து? | Best medicine for cough?

இருமலுக்கு சிறந்த மருந்து?


பொடிசு, ரெண்டு நாளா இருமிகிட்டே இருக்கானே, அந்த கொல்லையில கெடக்குற தொளசி, திப்பலி தழைய பறிச்சு கொண்டாடி, சுக்கு தட்டி காச்சி கொடுக்கறேன்,” என வீட்டு வைத்தியர்களாய் மருந்துடன் அன்பையும் குழைத்து கொடுத்தது பாட்டிகளின் இராச்சியம்!!
இன்றோ, “உச்” என்றாலும் சரி “அச்” என்றாலும் சரி, “ஓடு டாக்டர்ட, முழுங்கு ஆண்டிபயாடிக்க!
” என நவீன பாட்டிகளும், தாய்மார்களும் இதற்கு முடிவுரை எழுதி வருகிறார்கள்.
போதாத குறைக்கு ராக்கெட் விலை ரியல் எஸ்டேட்டால், குறுகிப்போன வீட்டுக் கொல்லைப்புரங்களில், “துவைத்த துணிகளை காயவைக்கவும், கழுவிய பாத்திரங்களை பரப்பி வைக்கவுமே இடமில்லையாம், இதுல மூலிக செடிக்கு எங்க போறது?
“இந்த T20 காலத்தில இலை, தழை எல்லாம் வொர்க் அவுட் ஆகாதுங்க!
” எனும் மேம்போக்கு மேதாவித்தனத்தின் தாக்கம் அதிகரிக்க, இன்னும் பல காரணங்களால் இன்று ஓரங்கட்டப்படுகிறது நம் கை வைத்திய கலாச்சாரம்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில், தினசரி வாழ்க்கையில் நோயாளியாக இருப்பது இயல்பாகிவிட்டது!
ஆரோக்கியமா இருக்க மூலிகைகளை பற்றி தெரிஞ்சிக்கறதுக்கும், இப்போ இருக்குற வாழ்க்கைமுறைக்கு ஏத்த மாதிரி பயன்படுத்திக்கிறதுக்கும் ஆர்வம்தான்!
80 ஐ கடந்தும் தன்னுடைய எந்த வேலைக்கும் யார் துணையுமின்றி உடலிலும் மனத்திலும் உற்சாகம்தான் போங்க.
இன்றும் “B”, “C” டவுன்களில் இவர்போல் நடமாடும், தாத்தா பாட்டிகளை நம்மால் காணமுடியும்.
7 பிள்ளைகளை சுகமாய்ப் பெற்றவள்; 16 பேரப் பிள்ளைகளைத் தூக்கி வளர்த்தவள்; “அப்பல்லாம் ஏது கண்ணு ஆஸ்பத்திரி?
” எனும் இந்த வெள்ளந்தி உமையாள் பாட்டி இனி நம்மோடு பயணிக்கிறாள்!

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..