Breaking News

புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எவ்வாறு ஒருவர் அடிமை ஆகிறார்? | How does one become addicted to smoking habits?

புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எவ்வாறு ஒருவர் அடிமை ஆகிறார்

புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எவ்வாறு ஒருவர் அடிமை ஆகிறார்?

புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது.
நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது.
இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவையாக வெளிப்பட்டு, புகை பிடிக்கத் தூண்டி, நாளடைவில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறது.
ஆரம்பத்தில் ஒரு சிகரெட் பிடித்து ‘நன்றாக’ இருப்பதாக உணர்ந்தால், நாளடைவில் அதே உணர்வைப் பெற பல சிகரெட்டுகள் பிடிக்க வேண்டிவரும்.
பின்னர் இயல்பாக உணர்வதற்கே புகை பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.
நிகோட்டின் மட்டும் அல்லாது 4000 த்துக்கும் மேற்பட்ட கெடுதலான ரசாயனங்கள் சிகரெட்டில் உள்ளன.
இவை நுரையீரலில் மட்டுமில்லாமல் உடலில் பல்வேறு பாகங்களிலும் புற்றுநோயையும் மற்ற நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..