Breaking News

ரத்தக் கொதிப்பு என்றால் என்ன? | What is blood boiling?

ரத்தக் கொதிப்பு என்றால் என்ன? | What is blood boiling?

ரத்தக் கொதிப்பு என்றால் என்ன?

ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை.
ரத்த அழுத்தத்தில் சுருக்கழுத்தம் (systolic blood pressure) விரிவழுத்தம் (Diastolic blood pressure) என இரண்டு அலகுகள் உள்ளன.
blood pressure, low bp, high bp 2-வது வகையில் உள்ளவர்கள் ரத்தக் கொதிப்பு வராது தடுக்க வேண்டுமானால், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும்.
ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இயற்கையாகவே வயதாக ஆக ரத்த நாளங்கள் அதனுடைய ஜவ்வுத்தன்மையை இழப்பதால், நாளங்களின் அகலம் குறுகி ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
மரபணுக்களால் மட்டுமின்றி, அதே உணவு, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் என்று பெற்றோர் வாழ்ந்த சூழ்நிலையிலேயே வாழும்போது குழந்தைகளுக்கும் அந்த நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிக ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பைப் பொறுத்து ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல் அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள் மது மற்றும் புகைப் பழக்கம் சரியான உடற்பயிற்சி இன்மை நீரிழிவு
நோய் ரத்தக் கொதிப்பின் வகைகள்: வகை 1: பெரும்பான்மையோருக்கு வரும் ரத்தக் கொதிப்பு இந்த வகைதான்.
வகை 2: இது சீறுநீரகம் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படுகிறது.
ரத்தக் கொதிப்பு வருவதற்கான அறிகுறிகள்: பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை.
மற்ற பல காரணங்களுக்காக உடலைப் பரிசோதிக்கும்போது இது கண்டு பிடிக்கப்படுகிறது.
எனினும் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.
ரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்: மாரடைப்பு, இதயத் துடிப்பில் கோளாறு, இதயம் பெரிதாகுதல், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த நாளங்களில் நோய்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு, மற்றும் கண்களில் பாதிப்பு போன்றவை.
சிகிச்சை முறைகள்: ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, பரிசோதித்து, தவறாது மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தவறாது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.
கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பக் காலம் முழுவதிற்கும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
உணவு முறைகள்: அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும்.
பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டாலே இவை கிடைத்துவிடும்.
சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தப்படும் சோடா உப்பு, சைனீஸ் உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவில் சோடியம் அதிகம் இருக்கும்.
வடகம், ஊறுகாய், சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது, 20 நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேக நடை, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
யோகப் பயிற்சிகளால் உடல் எடை சீராவதால், ரத்த அழுத்தமும் சீராகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இரவில் அனைவருக்கும் ரத்த அழுத்தம் பொதுவாகக் குறைந்தாலும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் இரவிலும்கூட ரத்த அழுத்தம் குறைவதில்லை.
எனவே மன அழுத்தத்தால் ஏற்படும் அதிகப்படியான ரத்த அழுத்தம் நீங்குகிறது.
யோகா தளர்வு நிலையை அளிப்பதால் மன அழுத்தம் நீங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
யோகப் பயிற்சிகள் அனைத்துமே தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமன்செய்வதால் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.
அப்பாதிப்பு ஒருவருக்கு நீரிழிவாகவும், இன்னொருவருக்கு வயிற்றில் புண்ணாகவும், இன்னொருவருக்கு ரத்தக் கொதிப்பாகவும் வெளிப்படுகிறது.
நீங்கள் விரும்பியபடி விஷயங்கள் நடக்காதபோது, உங்கள் உடல், மனம் அனைத்துமே போராட்டத்துக்கு உள்ளாகிறது.
இதனால் உடலில் வளர்சிதை மாற்றம் தீவிரமாகி நாட்பட்ட நோய்க்குக் காரணமாகிறது.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..