Breaking News

உடற்பருமன் என்றால் என்ன? | What is obesity?

உடற்பருமன் என்றால் என்ன? | What is obesity?

உடற்பருமன் என்றால் என்ன?

ஒருவருடைய உடல் எடை, இயல்பாக இருக்க வேண்டியதைவிட 20 சதவீதம் கூடுதலாகிவிட்டால் அவர் உடல் பருமனுடன் இருக்கிறார் என்று அர்த்தம்.
இந்தியர்களின் உடல் எடை இந்தியர்களுக்கு மரபு வழியாகவே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இடைச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ.க்கு அதிகமாகவும், பெண்களுக்கு 85 செ.மீ.க்கு அதிகமாகவும் இருந்தால், சர்க்கரை மற்றும் இருதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
உடற்பருமன் எண் = உடல் எடை (கிலோவில்) / உடல் உயரம் x உடல் உயரம் (மீட்டரில்) Metric Units: BMI = Weight (kg) / (Height (m) x Height (m)) English Units: BMI =
Weight (lb) / (Height (in) x Height (in)) x 703 இந்த கணக்கின் படி, கணிக்கும் எண் 18.5க்கும் குறைவாக இருந்தால், குறைவான எடையுடன் இருக்கிறீர்கள்.
கணிக்கும் எண் 18.5க்கும் 24.9க்கும் இடையில் இருந்தால், சரியான எடையுடன் இருக்கிறீர்கள்.
கணிக்கும் எண் 25க்கும் 29.9க்கும் இடையில் இருந்தால், அதிக எடையுடன் இருக்கிறீர்கள்.
உடற்பருமன் குறித்து இந்திய சுகாதாரத் துறை இந்தியாவைப் பொறுத்தவரை உடற்பருமனைக் கணிக்கும் எண் 23க்கும் மேல் இருந்தால், அதிக எடை உள்ளவராகவும், 25க்குமேல் இருந்தால், உடல் பருமன் உள்ளவர்களாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என இந்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வியாதிகளுக்காக உட்கொள்ளும் ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் அதிக அளவில் உணவு உட்கொள்ளுதல் நாளமில்லாச் சுரப்பிகளில் எற்படும் பலவிதமான கோளாறுகள் உடற்பருமன்கொண்ட இளம் வயதினர் உடற்பருமன் இள வயதினரை மனரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் மிகவும் பாதிக்கிறது.
எனவே, குழந்தைகளுக்கு சரியான உணவு மற்றும் வாழ்க்கைமுறையை சொல்லித்தருவது அவசியம்.
உடற்பருமனால் வரும் கேடுகள் இருதய நோய்கள், ரத்தக் கொதிப்பு, இருதயக் குழாய்களில் அடைப்பு, பித்தப்பை நோய்கள், மூளையில் ரத்தம் கசிவது, மூட்டு நோய்கள், இடுப்பு வலி, சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு சேர்வது, நெஞ்சு எரிச்சல், போன்றவை உண்டாகும் வாய்ப்புள்ளது

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..