Breaking News

மனஅழுத்தம் (Stress) என்றால் என்ன?

மனஅழுத்தம் (Stress) என்றால் என்ன?

மனஅழுத்தம் (Stress) என்றால் என்ன?


ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும்.
ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறிவிடும்.
உடல் அல்லது உயிருக்கு ஆபத்து: உடல் அல்லது உயிருக்கு ஆபத்தை உணரும்போது இந்த வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது.
சுற்றுப்புறச் சூழ்நிலை: சப்தம், கூட்டம், குடும்பம் மற்றும் தொழில் நெருக்கடிகளால் நேர்வது.
அதிக வேலைப்பளு: இந்த வகையான மன அழுத்தம் உடலை மிகவும் பாதிக்கும்.
பணிகளை எப்படிச் சீரமைத்துக்கொள்வது, எப்படி ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவது என்று தெரியாதபோது இந்த வகை மன அழுத்தம் நேரும்.
மனதளவில் வெளிப்படும் அறிகுறிகள்: பதட்டம், எரிச்சல், மனம் ஒருமுகப்படுத்த முடியாதது, அதிகக் களைப்படைவது, தூக்கமின்மை.
உடலளவில் வெளிப்படும் அறிகுறிகள்: வாய் உலர்ந்துவிடுவது, மூச்சுவிடுவதில் சிரமம், அஜீரணக் கோளாறு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உள்ளங்கை வேர்ப்பது, இருதயம் வேகமாகத் துடிப்பது, உடல் தசைகள் இறுகுவது.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..