Breaking News

பெண்கள் தன்னை அழகாக காட்டி கொள்வது எதனால்?

பெண்கள் தன்னை அழகாக காட்டி கொள்வது எதனால்?

பெண்கள் தன்னை அழகாக காட்டி கொள்வது எதனால்?

ஒரு பெண் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள விரும்புவது அவளுடன் பிறந்த குணம்.
ஆண்களுக்குப் பணம் என்னவெல்லாம் செய்யுமோ, அதைப் பெண்களுக்கு அழகு செய்து தரும்.
அன்றாட வாழ்வியலில் இதுவே நடைமுறை என்பதால், பெண்கள் தங்களை அழகாகக் காண்பிக்கப் பிரயத்தனப்படுகிறார்கள்.
காலம்காலமாக இப்புவியின் ஜனத்தொகையில், ஆண்களை விட பெண்களின் விகிதம் கூடுதலாகவே இருந்து வந்திருக்கிறது.
குறைவான ஆண்களுக்கு அதிகம் பெண்கள் போட்டி போட வேண்டியிருந்ததால், அழகு முன்னிலை பெற்றது.
மாறாக, ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்திருந்தால், நிலைமை தலைகீழாகி விடும்.
கருத்தடை என்று ஒன்று இல்லாதிருந்தால், ஒவ்வொரு பெண்ணும் சராசரியாகப் பன்னிரண்டிலிருந்து பதினெட்டு குழந்தைகளுக்குத் தாயாக முடியும்.
தங்கள் தோற்றத்தைப் பற்றிப் பொருட்படுத்தாது, விருப்பப்படி மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பெண்கள் சரித்திர காலத்திலும் சரி, இன்றைக்கும் சரி… மிகச்சிலரே!
ஆன்மீகப் பாதை ஆண், பெண், அழகு, அழகின்மை எல்லாவற்றையும் கடந்தது என்பதால், அங்கே வேண்டுமானால் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் பெண்களுக்கு இல்லாது போகும்.
” ஆண்கள் தங்கள் தோற்றம் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று யார் சொன்னது?
தோற்றத்தில் ஆணுக்குரிய கம்பீர அழகு இல்லாதவனாய் இருந்தாலும், பணம் மிகுந்திருந்தால் அவனிடம் ஓர் அதிகாரம் கூடுகிறது.
அதை அவனுக்கு முன்பு உடல் பலம் தந்தது; இன்று செல்வம் தருகிறது.
அறிவாற்றலில் குறைபட்டிருந்தாலும், அழகு மிக்கவளாக இருந்தால், ஆண்களுக்கிடையில் ஒரு பெண் சக்தி மிக்கவளாகி விடுகிறாள்.
பெண்கள் தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள விரும்புவது அப்படியொன்றும் கவலைக்குரிய விஷயமல்ல என்றுதான் சொன்னேன்.
ஐம்புலன்களைத் தாண்டி யோசிக்க முடியாதவர்களுக்குத் தான் அழகு, அசிங்கம் என்பதெல்லாம் முக்கியமானதாக இருக்கிறது.
அகத்திலா, முகத்திலா.. எங்கே அழகாக இருக்க வேண்டும் என்பது அவரவர் தேர்வு.
வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தரப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
உள்ளே எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய அக்கறை இருப்பவர்கள், தங்கள் வெளித்தோற்றம் பற்றி அலட்டிக் கொள்வது இல்லை.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..