Breaking News

நெற்றியில் விபூதி வைப்பது எதற்க்காக?

நெற்றியில் விபூதி வைப்பது எதற்க்காக?

நெற்றியில் விபூதி வைப்பது எதற்க்காக?

விபூதி… ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக மேக்-அப் செய்துகொள்ள விரும்புகிறார்கள்… (சிரிக்கிறார்) விபூதி என்பது சாம்பல்.
இந்த ஒட்டுமொத்த உலகமே எரிக்கப்பட்டால் கூட, இறுதியில் கிடைப்பது சாம்பல் தானே?
நம் சக்திநிலை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு, விபூதி குங்குமம் வைத்துக் கொள்வதென்பது ஒருவித தொழில்நுட்பமாகும்.
ஆனால் அதுபோன்ற சாதனாவைச் செய்ய இங்கு நாம் தயார்நிலையில் இல்லை என்பதால், பொதுவாக வேறு முறைகளில் விபூதி தயார் செய்யப்படுகிறது.
மனதை ஒரு குறிப்பிட்ட விதத்தில் கையாளும்போது, அதே மனம் அனைத்திற்குமே தீர்வாக இருக்கும்.
மனதை இன்னொரு விதத்தில் கையாளும்போது, இதுவே பூமியில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகிவிடும்.
எது தீர்வாக இருக்கவேண்டுமோ அதுவே ஒரு பிரச்சனையாக மாறினால், பிறகு என்னதான் வழி?
மனம் என்பது நமக்கு ஒரு பிரச்சனையாக இல்லாமல், ஒரு தீர்வாக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட சில இடங்களில் நாம் இந்த விபூதியை (சாம்பலை) பூசும்போது, அது நம் மனதின்மேல் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரண்டு தன்மைகளும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த நம் முந்தைய தலைமுறைகள், வீட்டுப் பெண்கள் குங்குமத்தையும், ஆண்கள் விபூதியையும் பூசிக் கொள்ளுமாறு முறை செய்தனர்.
ஆனால் இப்போது எல்லா பெண்களும் குங்குமத்திற்கு பதிலாக ப்ளாஸ்டிக் (ஸ்ட்டிக்கர்) பொட்டு வைக்கிறார்கள்.
சிவப்பு ப்ளாஸ்டிக்கை வைத்துக் கொள்ளும்போது, ஏன் வெள்ளை ப்ளாஸ்டிக் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூட சிலர் கேட்கலாம்.
நீங்கள் சொர்க்கத்தில் இருந்தாலும் சரி, நரகத்தில் இருந்தாலும் சரி, நம்மைச் சுற்றி என்ன இருந்தாலும் சரி, நமது உடல், நமது மனம், சக்திநிலை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொருத்தே நம் வாழ்க்கை அமைகிறது.
இந்த விஷயங்களெல்லாம் நன்றாக நடப்பதற்கு நாம் சில தொழில்நுட்பங்களை, கருவிகளை உருவாக்கியுள்ளோம்.
நம் சக்திநிலை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு, விபூதி குங்குமம் வைத்துக் கொள்வதென்பது ஒருவித தொழில்நுட்பமாகும்.
ஆனால், பிளாஸ்டிக் வைத்துக் கொள்வது உங்கள் மூன்றாவது கண்ணை நீங்களே மூடிக்கொள்வதைப் போன்றது.
நீங்கள் விபூதி, குங்குமம் அல்லது மஞ்சள், இதில் எதையாவது வைத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..