Breaking News

கருக்கலைப்பு செய்வது பாவச்செயலா?

கருக்கலைப்பு செய்வது பாவச்செயலா?

கருக்கலைப்பு செய்வது பாவச்செயலா?


கருக்கலைப்பு கடவுளுக்கு எதிரான பாவமோ, இல்லையோ பொறுப்பில்லாமல் கர்ப்பமாவது மனித குலத்துக்கு எதிரான பாவம்.
எப்போது ஒரு புதிய உயிர் உங்களுக்குத் தேவையில்லையோ, அதற்கு முதலில் இடம் கொடுத்திருக்கவே கூடாது தானே?
உங்களுக்குள் உருவாகும் உயிரே உங்களுக்குப் பொருட்டில்லாமல் போகும்போது, வெளியில் இருக்கும் வேறு எந்த உயிர்தான் உங்களுக்கு மதிப்புள்ளதாகத் தோன்றப் போகிறது?
உங்கள் மீதும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மீதும், உருவாகிக் கொண்டிருக்கும் உயிர் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் மனிதநேயத்தைப் பற்றியதே இந்தக் கேள்வி.
ஒரு தாயைக் காப்பாற்றவோ, சரியாக உருவாகாததால் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டோ மருத்துவ ரீதியாக ஒரு கரு கலைக்கப்படுவது வேறு.
ஆனால், மருத்துவத்தில் இந்த வசதி இருக்கிறது என்கிற தைரியத்தில் பொறுப்பற்று கர்ப்பமாவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
தனக்கு எதிரில் வந்த நின்ற உதவியாளரை அமெரிக்க ஜனாதிபதி நிமிர்ந்து பார்த்தார்.
“சட்ட அதிகாரி இதை உங்களிடம் காட்டச் சொன்னார்…” என்று கையில் ஒரு சீட்டுடன் அவர் தயங்கி நின்றார். “என்ன?
” கருக்கலைப்பு மசோதா என்பதைத்தான் ‘அபார்ஷன் பில்’ என்று உதவியாளர் சொன்னார் என்பது கூடவா ஜனாதிபதிக்குப் புரியாது என்று கேட்காதீர்கள்.
மருத்துவ வசதி இருப்பதால், பொறுப்பாக இருக்க வேண்டியவர்கள் கூட எப்படிப் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள் என்பதற்காகச் சொல்லப்பட்ட நகைச்சுவை இது.
சொந்தக் காரணங்களையோ, குடும்பச் சூழ்நிலைகளையோ, சமூக அவமதிப்பையோ காரணமாக்கிக் கருக்கலைப்பு செய்து கொள்வது இன்றைக்கு அதிகமாகிவிட்டது.
இதைப் பாவம் என்றோ, புண்ணியம் என்றோ பார்க்க நான் தயாராக இல்லை.
இன்னொரு உயிரை எடுத்தெறிவது மனிதகுலத்துக்கு மிக எதிரானது; இது உங்களுக்கு நல்லது செய்யாது என்றுதான் சொல்கிறேன்.
“உங்கள் மகன் இந்த இரவைத் தாண்டுவது கஷ்டம்” என்று தன் பெற்றோரிடம் மருத்துவர் சொல்வதை அவன் கேட்டான்.
அந்த இரவைக் கடந்துவிட்டால், அம்மாவின் துயரம் சற்றே தீரும் என்று அவன் நம்பினான்.
அடுத்துவரும் ஒவ்வொர் இரவையும் இதேபோல் கடக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.
மனிதனுக்கு அவனேதான் தடை என்பது பற்றி அவர் எழுதிய பல புத்தகங்கள் இன்றைக்கும் பிரபலம்.
மனநல சிகிச்சைகளில் பல புதிய தலைமுறைகளை அறிமுகம் செய்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் அவர்.
12 வயதோடு முடிந்து போயிருந்தால், உலகம் மில்டன் எரிக்சனை இழந்திருக்கும்

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..