Breaking News

பெரியவர்களுக்கு திதி செய்வது எதற்க்காக?


பெரியவர்களுக்கு திதி செய்வது எதற்க்காக?

பெரியவர்களுக்கு திதி செய்வது எதற்க்காக?



பெற்றோர் மூலமாகத் தான் நாம் இந்த உலகிற்கு வந்தோம். அவர்கள் உயிரைக் கொடுக்கா விட் டாலும் இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்களே.

எனவே, நன்றி உணர்வோடு திதி செய்ய வேண்டும்.

மறைந்தவர்களின் புகைப் படத்தை சுவரில் மாட்டி வைத்தால் மட்டும் போதாது. அவர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது அவசியம் சிந்திக்க வேண்டும். அவர்கள் பெயரில் முடிந்த நல்லவற்றை செய்யுங்கள். காகம், பசு போன்ற உயிர்களுக்கு உணவளியுங்கள். அதனால், நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். நினைவு நாளில் உணவுக்காக வாடும் ஏழைகளுக்கு உணவளியுங்கள். உறவினர்களை மட்டும் அழைக்காமல் ஏழை, எளியவர்களையும் அழைத்து உணவிடுவது தான் சிறந்தது.
ஏழைகள் உண்பதால் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைகிறதோ இல்லையோ நிச்சயமாக நமக்கு நன்மையுண்டு. நம் நிம்மதிக்காகவும், அமைதிக் காவும் இந்த நல்ல விஷயத்தை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..