Breaking News

மன அழுத்தம் எப்படி நம்மைப் பாதிக்கும்?

மன அழுத்தம் எப்படி நம்மைப் பாதிக்கும்

மன அழுத்தம் எப்படி நம்மைப் பாதிக்கும்?


மன அழுத்தத்துக்கான பதில் வினைகளை நம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் ஒருங்கிணைக்கிறது.
இதனால், அதிக இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம், வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது, அதிகமாகத் தசைநார்கள் விரைப்படைவது, ரத்தத்தில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகரிப்பது, ரத்தத்தின் தடிமன் அதிகரிப்பது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது போன்ற பல விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன.
மன அழுத்தத்தின் சில விளைவுகள்: கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறுகள், தலைவலி மற்றும் முதுகுவலி தொற்றுநோயை எதிர்க்கக் கூடிய ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால் கபம் மற்றும் இதர நோய்கள் அதிகம் வருவது.
தொடர்ந்த மன அழுத்தமானது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாய்ப்பை அதிகப்படுத்தி அதனால் வாதம் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.
புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், அளவுக்கதிகமாக உண்ணுதல் போன்ற நடத்தைகளைத் தூண்டிவிடுவதிலும் முக்கியக் காரணமாக இருக்கிறது.ஒருவர் தனக்குள் ஒரு தெளிவான தன்மையில் இருக்கும்போது, மன அழுத்தம் என்பதே வராது.
தீவிரமாக வேலை செய்பவராகவும், அதே நேரத்தில் தளர்வானவராகவும் இருப்பதே மிகவும் சிறந்தது.
உள்நிலையில் பிரச்னைகள் இல்லாதபோதுதான், வெளிப்புறப் பிரச்னைகளையும் நீங்கள் நன்கு கையாள முடியும்

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..