Breaking News

எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்?

எதைச் சாப்பிடுகிறோம் என்பதே தெரியாமல் சிலர் டிவியைப் பார்த்தபடி உணவை உள்ளே தள்ளுகிறார்கள்.
சிலர் கண்ட கண்ட பதார்த்தங்களை நேரம் காலம் தெரியாமல் கபளீகரம் செய்கிறார்கள்.
சாப்பிடுவதற்கும் ஒரு முறை உள்ளது என்பதை இதுபோன்றவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.
உணவுப் பழக்கங்கள்: நீங்கள் உண்ணும் உணவு நீங்கள் வாழும் இந்த நிலத்தின் சத்துக்களை உறிஞ்சி உருவானவை.
நிலத்தின் ஒரு பகுதியான இந்த உணவு சாப்பிட்டபிறகு நீங்களாகவே மாறுகிறது.
எனவே சாப்பிடும்முன் இந்த உணவு உங்களுக்கு கிடைக்க வழி செய்த அனைத்து சக்திகளுக்கும் உங்கள் நன்றியை வெளிப்படுத்திவிட்டு, முடிந்தவரை மௌனமாக உண்ணுங்கள்.
ஒவ்வொரு நாள் காலையிலும், மஞ்சள் மற்றும் வேப்பிலை உருண்டைகளை வெறும் வயிற்றில் உண்டு வந்தால், நல்ல ஜீரணசக்தி உண்டாவதோடு, தொற்றுக் கிருமிகளின் பாதிப்பிலிருந்தும் புற்றுநோய் ஏற்படாமலும் தவிர்க்க இயலும்.
தரையில் கால்களை மடித்து (சுகாசனம்/சாப்பாடு ஆசனம்) அமர்ந்து உண்பதே சிறந்தது.
ஒவ்வொரு வாய் உணவையும் குறைந்தபட்சம் 24 முறையாவது மெல்ல வேண்டும்.
உணவு செரிமானம்… உணவு செரிமானம் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது.
உமிழ்நீரில் இருக்கும் ஒருவிதமான நொதி, வாயிலிருந்தே உணவு செரிமானத்தைத் துவக்கிவிடுகிறது.
உணவை, இந்த நொதி நிறைந்த உமிழ்நீருடன் கலந்து நன்றாக மென்று உண்பது, ஆபத்தான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், மற்ற நுண்ணுயிர்களிடமிருந்தும், வேறு பல இரசாயனங்கள், கதிர்வீச்சு மற்றும் விஷப் பொருட்களிடமிருந்தும் பாதுகாக்கிறது.
சரியாக மென்று தின்றால், 40-50% உணவு செரிமானம் வாயிலேயே நடந்துவிடுகிறது.
உணவு சரியாக மெல்லப்படாவிட்டால், சரியாக செரிமானமாகாத உணவு வயிற்றை அடைந்து, ஒட்டுமொத்த உடலமைப்புக்கும் பிரச்சனை ஏற்படுத்துகிறது.
சாப்பாட்டுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக சிறிதளவு சீரகத் தண்ணீரோ அல்லது சாதாரண நீரோ குடிப்பது நல்லது.
முதலில் சமைக்காத, பச்சை உணவு வகைகளை உண்டுவிட்டு, பிறகு சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..