Breaking News

பக்கவாதத்தை எவ்வாறு தடுப்பது?

பக்கவாதத்தை எவ்வாறு தடுப்பது?

பக்கவாதத்தை எவ்வாறு தடுப்பது?

பொதுவாக உலகில் அதிகமான இறப்புக்கு மலேரியா, எச்.ஐ.வி., காசநோய் போன்ற நோய்கள்தான் காரணம் என்று நம்பப்படுகிறது.
ஆனால் இந்த மூன்று நோய்களால் இறப்பவர்களின் மொத்த எண்ணிக்கையை விட பக்கவாதத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
இதை நாம் சரியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் தடுக்கவும் முடியும்.
மாரடைப்பு எப்படி ஏற்படுகிறதோ கிட்டத்தட்ட அதே முறையில் மற்றும் அதே காரணங்களால் தான் இந்த வியாதியும் ஏற்படுகிறது.
மூளையிலுள்ள இரத்த நாளங்களில் அடைப்போ, வெடிப்போ ஏற்படும்போது மூளையின் அந்த குறிப்பிட்ட பாகத்திற்கு இரத்த ஓட்டம் தடைப்படுகிறது.
அதனால் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்காமல் மூளையின் அந்த பாகம் இறக்க நேரிடுகிறது.
மூளையின் பாகம் மற்றும் அதன் செயல்திறனைப் பொறுத்து, உடல் பாதிப்பு பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ ஏற்படும்.
பக்கவாதம் ஏற்பட்ட ஒவ்வொரு நிமிடமும் லட்சக்கணக்கான மூளை செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன.
ஆனால் மூளையின் செல்கள் புதுப்பிக்கப்படாத தன்மை கொண்டதால், பாதிப்பு நிரந்தரமாகிவிடுகிறது.
அதனால் சிகிச்சை அளிக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மூளை அதன் செயல்களை இழப்பதால் பாதிப்பு உடலில் வெளிப்படுகிறது.
உடலின் செயல்பாடுகள், சிந்தனைகள், கற்றுக்கொள்ளும் திறன், உணர்வு மற்றும் பேச்சுத் திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.
அறிகுறிகள்… உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ கீழ்க்கண்ட அறிகுறிகள் திடீரென ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்லவும்.
உடலின் ஏதாவது ஒரு பகுதியில் கால், கை மற்றும் முகத்தில் மரத்துப் போதல் அல்லது சக்தி இழத்தல் மனக் குழப்பம், பேசுவதில் அல்லது புரிந்து கொள்வதில் சிரமம்.
ஒன்று அல்லது இரண்டு கண்களிலுமே பார்வை இழத்தல் நடப்பதில் சிரமம், தள்ளாடுதல், மயக்கம் காரணமில்லாமல் பொறுக்க முடியாத அளவு அதிக தலைவலி!
உடனடி சிகிச்சையின் அவசியம் இந்த அறிகுறிகள் ஆரம்பித்த மூன்று மணி நேரத்திற்குள் தகுந்த சிகிச்சை எடுத்தால், பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும்.
தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால், மூன்றில் ஒரு பங்கினர், ஒரு மாதத்திற்குள் நல்ல முன்னேற்றம் அடையமுடியும்.
சில சமயங்களில் மேற்கூறிய அறிகுறிகள் சில வினாடிகளோ அல்லது நிமிடங்களோ இருந்து, பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.
பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சனைகள்: உடலில் வலி உடம்பின் ஒரு பாதியில் வலுவின்மை அல்லது வாதம் தள்ளாட்டமான நடை விழுங்குவதில் சிரமம் அசதி தூங்குவதில் சிரமம் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துக் கொள்வதில் சிரமம் அல்லது இவர்கள் பேசுவதற்குச் சிரமப்படுதல் எழுதப்படிக்க
சிரமப்படுவது பார்வையில் கோளாறு மூளையின் செயல்களான ஞாபக சக்தி, மனக்கூர்மை, முடிவு செய்தல் போன்றவற்றில் பிரச்சனை குடல் மற்றும் மூத்திரப்பை கோளாறுகள் உணர்வுரீதியான பிரச்சனைகள், மனச்சோர்வு, பதற்றம், கோபம், சோகம், தன்னம்பிக்கை இழத்தல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சமநிலை இல்லாமை பக்கவாதத்திற்குப் பிறகு
மேற்கூறிய அறிகுறிகளால் கோபம், பதற்றம், சோர்வு என கசப்பான பல உணர்வுகள் ஏற்படுவது இயல்பு.
அதற்கு இடம் கொடுக்காமல் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனத்தையும், சக்தியையும் செலுத்தவும்.
உங்களை கவனித்துக் கொள்ளும் குடும்பத்தினரிடம் கசப்பை வெளிப்படுத்தாமல் அன்பாக இருக்கவும்.
குடும்பத்தினர், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறைகளை நோயாளி பின்பற்ற உதவவும்.
அவர்களுக்கு உணர்வுரீதியாக ஆதரவாக இருந்து அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் சோர்வடையாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
(உதாரணம்) இயல்பை விடவும் மெதுவாக செயல் செய்தல் மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் போன்றவை.
எனவே அதைப் புரிந்து கொண்டு ஆதரவாகச் செயல்படுதல் ரொம்ப முக்கியம்.
தற்போது உங்களுக்கு அதிக பொறுப்புகள் கூடி இருப்பதால், உங்கள் நலனையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
தடுக்கும் வழிமுறைகள்: ஆரோக்கியமான வாழ்க்கை முறை கண்டிப்பாக பக்கவாதம் ஏற்படுத்தும் வாய்ப்பைக் குறைக்கும்.
வயது அதிகரிக்க அதிகரிக்க பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதனால் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இதயம் மற்றும் இரத்த நாள நோய், சர்க்கரை நோய் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு இருந்தால் அதற்குத் தகுந்த சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது முக்கியம்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..