Breaking News

பெற்றோர்களின் பொறுப்பு | Responsibility of parents

பெற்றோர்களின் பொறுப்பு | Responsibility of parents





  • *      உங்கள் குழந்தைகள் அரசுத்தேர்வுக்கு தயாராகும்போது நீங்களும் சில தியாகத்திற்கு  தயாராகுங்கள்.

  •       குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற சூழலை முதலில் உங்கள் வீட்டில் உருவாக்குங்கள்.

  •       பிள்ளைகளின் தேவையறிந்து செயல்படுங்கள்.


  •       பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவுங்கள்.


  • *      உங்கள் குழந்தைகளில் பழக்க வழக்கங்கள் மற்றும் நண்பர்கள் சேர்க்கைகளை கண்காணியுங்கள்.


  • *      தேவையற்ற பழக்கவழக்கங்கள் அவனது வளர்ச்சி பாதைக்கு தடைகள்.அதனை அவனுக்கு புரியவையுங்கள்.மேலும் இது நமது குடும்பத்துக்கு ஆகாது எனவும் கூறுங்கள்.


  • *      நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் நண்பனாய் பழகுங்கள்.பழகும்போதே நேரத்தின் அருமை மற்றும் தவறான பழக்கவழக்கத்தினால் வரும் தீமை போன்றவற்றை அவனுக்கு எடுத்துக்கூறவும் மறவாதீர்கள்.


  •       உங்கள் குழந்தைகளின் தேவைகளை சநதியுங்கள்.அப்பப்போ சின்ன சின்ன பரிசுகள் மற்றும் பாராட்டுகள் கொடுப்பதை மறவாதீர்கள்.இவைகளை தவிர வேறு பெரிய பரிசுகள் இல்லை.திரைப்படத்தில் கூறியுள்ளது போல எல்லோருடைய இந்த சின்ன மனசும் ஒரு பாராட்டுக்குத்தான் ஏங்குது!


  •       உங்கள் குழந்தைகள் இன்டர்நெட் செல்லும் பழக்கம் இருந்தால் இன்னும் தீவிரமாக கண்காணியுங்கள்.இன்டர்நெட் சென்டர் நடுத்துபவரிடம் நட்பாக பழகுங்கள்,ஏனெனில் அவர் உங்கள் குழந்தை தவறான வழிக்கு போகாமல் கண்காணிப்பர்.


  •       தற்போதைய காலக்கடத்தில் அனைத்து குழந்தைகளும் மொபைலில்  கேம் விளையாடுவது என்பது மிகவும் பிடிக்கும்.உங்கள் குழந்தைகள் உங்கள் மொபைல் எடுத்து விளையாடும்போது, அப்பப்போ நீங்கள் இடையில் சென்று மொபைலிலில் கேம் தான் விளையாடுகிறார்களா? என்று பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் உங்கள் மொபைலிலில் இன்டர்நெட் வசதி இருந்தால் அவர்கள் இன்டர்நெட் சென்று தேவை இல்லாத விஷயங்களை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக அதுவே அமைந்து விடலாம்.


  • *      உங்கள் குழந்தைகளின் படிப்பு மேன்பாட்டு வழிகளை பற்றி ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.ஏனெனில் இது உங்கள் குழந்தைகளின் படிப்பை மேன்பாடு அடைய உதவும்.


  • *      உங்கள் குழந்தைகளை எப்போதும் படி படி என்று கூறாதீர்கள்.அவர்களுக்கு விளையாடவேண்டும் என்று தோன்றினால் சென்று விளையாட அனுமதி தாருங்கள்.அவர்கள் விளையாடிவிட்டு வந்தவுடன்  பின்பு படிக்க சொல்லுங்கள்.இப்போது உங்கள் குழந்தையின் மூளையானது முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கும். அவர்களால் எளிதாக படிக்க முடியும்.


  • *      பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றாம் வகுப்பு செல்லும் போது உங்கள் குழந்தைக்கு எந்த பாடப்பிரிவை (குரூப்) விருப்பமோ அதையே தேர்வுசெய்யுங்கள்.பக்கத்துக்கு வீட்டு குழந்தை எடுத்ததற்காக நீங்களும் அதே பாடப்பிரிவை (குரூப்) எடுக்க சொல்லாதீர்கள். ஏனெனில் படிக்க போவது உங்கள் குழந்தை,நீங்கள் அல்ல என்பதை மறவாதீர்கள்.


  • *      எப்பொழுதும் உங்கள் குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்.இது அவர்களுக்குள் ஒரு மனக்கவலையை தோற்றுவிக்கும்.

  • *      அவர்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதே அதையே சிறப்பாக செய்ய உதவுங்கள்.அவர்கள் வாழ்வில் வெற்றிபெறுவது நிச்சயம்.

 




கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..